search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானிலை ஆய்வு மையம்
    X
    வானிலை ஆய்வு மையம்

    2 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம் தகவல்

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை லேசான மழை பெய்யக்கூடும். தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, திருப்பூர் மாவட்டங்களில் நாளை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    மழை

    நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். 

    சென்னையை பொறுத்தவரை  அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய இலேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். 
    Next Story
    ×