search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    அரசு நிதியை பயன்படுத்த முழு சுதந்திரம்-ஊராட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

    தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வரும் சேமிப்பு தொகையை ஊராட்சிகளுக்கே வழங்க வேண்டும்.
    அவிநாசி:
     
    அவிநாசி ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் நடந்தது. கூட்டமைப்பு தலைவர் பாக்கியலட்சுமி தலைமை வகித்தார். செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மத்திய, மாநில நிதிக்குழு மானியம், அனைத்து ஊராட்சிகளுக்கும் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும். 15-வது நிதிக்குழு மானியத்துக்கு ஒவ்வொரு ஊராட்சியிலும் தீர்மான அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட பணிகளுக்கு பணி ஆணை மற்றும் நிதியை விரைவில் வழங்க வேண்டும்.

    வரைமுறைப்படுத்தப்பட்ட வீட்டு மனைகளுக்கு அரசு வசூல் செய்த நிதியை ஊராட்சிகளுக்கு விடுவிக்க வேண்டும். வீட்டுமனைகளை வரை முறைப்படுத்தும் அதிகாரத்தை அந்தந்த ஊராட்சி தலைவர்களுக்கே வழங்க வேண்டும்.

    அரசு வழங்கும் நிதியை தேவைப்பட்ட இடத்தில் ஊராட்சி நிர்வாகம் பயன்படுத்த முழு சுதந்திரம் வழங்க வேண்டும். ஊராட்சிகள் சார்ந்து பத்திரப்பதிவு துறை மூலம் வரக்கூடிய வருவாயை  அனைத்து ஊராட்சிகளுக்கும் பகிர்ந்து வழங்க வேண்டும்.

    குடிநீர் இயக்குபவர் மற்றும் துப்புரவு பணியாளர்களை தேர்வு செய்யும் அதிகாரத்தை அந்தந்த ஊராட்சி தலைவர்களுக்கு வழங்க வேண்டும். 
    தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வரும் சேமிப்பு தொகையை ஊராட்சிகளுக்கே வழங்க வேண்டும்.

    பல ஊராட்சிகளில் பயனற்று கிடக்கும் இ-சேவை மையங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அதிகளவில் கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டும்.அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில்  குழாய் பதிக்கும் பணியின் போது, ஊராட்சியில் நிர்வாகங்கள் சார்பில் பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் சேதமடைகின்றன. 

    அவ்வாறு சேதமடைந்த குழாய்களை அன்றைய தினமே மாற்றித்தர வேண்டும்.நான்காவது குடிநீர் திட்டப்பணிகளை வேகப்படுத்த வேண்டும். கிராமங்களில் தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில் நிர்ணயிக்கப்பட்ட அளவு தண்ணீர் வினியோகிக்க வேண்டும்.

    ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கு ஊதிய உயர்வுடன்  பணி நிரந்தரம் செய்ய வேண்டும். உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ், கட்சி பாகுபாடின்றி ஊராட்சி தலைவர்களை கலந்தாலோசித்து பணி மேற்கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    Next Story
    ×