search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கள்ளக்குறிச்சியில் போலி கைக்கெடிகாரம் விற்பனை செய்யப்பட்ட ஒரு கடையில் போலீசார் சோதனை நடத்திய காட்சி.
    X
    கள்ளக்குறிச்சியில் போலி கைக்கெடிகாரம் விற்பனை செய்யப்பட்ட ஒரு கடையில் போலீசார் சோதனை நடத்திய காட்சி.

    பிரபல நிறுவனங்கள் பெயரில் போலி கைக்கெடிகாரம் விற்ற 4 வியாபாரிகள் கைது

    கள்ளக்குறிச்சியில் பிரபல நிறுவனங்கள் பெயரில் போலி கைக்கெடிகாரம் விற்ற 4 வியாபாரிகளை போலீசார் கைது செய்தனர்.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் உள்ள சில கைக்கெடிகாரம் கடைகளில் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி கைக்கெடிகாரம் விற்பனை செய்யப்படுவதாக அந்த நிறுவனங்களுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து அந்த நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் நேற்று கள்ளக்குறிச்சியில் கைக்கெடிகாரம் விற்பனை செய்யும் கடைகளுக்கு சென்று கைக்கெடிகாரம் வாங்குவதுபோல் பார்வையிட்டனர்.

    அப்போது 4 கடைகளில் போலி கைக்கெடிகாரம் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரிந்தது. இது குறித்து தனியார் நிறுவன அதிகாரிகள், கள்ளக்குறிச்சி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தராஜ், மணிகண்டன் ஆகியோர் தலைமையிலான போலீசார் கள்ளக்குறிச்சியில் உள்ள கைக்கெடிகார கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

    இதில் கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் அருகில், துருகம் சாலை, கச்சேரி சாலையில் உள்ள 4 கடைகளில் இருந்த 208 போலி கைக்கெடிகாரங்கள் மற்றும் அந்த கைக்கெடிகார நிறுவனங்களின் பெயர் பொறிக்கப்பட்டிருந்த 100 பைகளையும் பறிமுதல் செய்தனர்.

    மேலும் போலி கைக்கெடிகாரங்கள் விற்பனை செய்தது தொடர்பாக வியாபாரிகளான கள்ளக்குறிச்சியை சேர்ந்த முரளிதரன் (வயது 48), சலீம்(55), பரீத்(50), ஜான்பாஷா (31) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் கள்ளக்குறிச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×