search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.கே.வாசன்
    X
    ஜி.கே.வாசன்

    பா.ஜனதாவின் புதிய தலைவருக்கு வாழ்த்து தெரிவித்த ஜி.கே.வாசன்

    தமிழக மக்களுக்கான பொதுப்பணியை செய்வதற்கு அண்ணாமலைக்கு வாய்ப்பு இருக்கிறது என ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    பா.ஜ.க.வின் தமிழக தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலையை வாழ்த்துகிறேன். சமூக ஆர்வலராக செயல்பட்ட பெருமையும் இவருக்கு உண்டு.

    குறிப்பாக தமிழக மக்களுக்கான பொதுப்பணியை செய்வதற்கு அவருக்கு வாய்ப்பு இருக்கிறது. அதுவும் தமிழகம் வளர்ச்சி பெறவும், தமிழக மக்களின் எண்ணங்களை மத்திய அரசுக்கு எடுத்துக்கூறுவதற்கும் இப்பணி சிறப்பாக அமையும்.

    எனவே பா.ஜ.க.வின் தமிழக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலையை த.மா.கா சார்பில் பாராட்டி, பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

    Next Story
    ×