search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்த காட்சி
    X
    கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்த காட்சி

    கல்வராயன்மலையில் ரூ.10 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி - கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கல்வராயன்மலையில் உள்ள கல்படை தரைப்பாலத்தை நேரில் ஆய்வு செய்தார். அப்போது தரைப்பாலத்தை மேம்பாலமாக கட்டுவது குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
    கச்சிராயப்பாளையம்:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கல்வராயன்மலையில் உள்ள கல்படை தரைப்பாலத்தை நேரில் ஆய்வு செய்தார். அப்போது தரைப்பாலத்தை மேம்பாலமாக கட்டுவது குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

    இதற்கு ஏற்கனவே ரூ.4 கோடி மதிப்பில் திட்ட அறிக்கை தயார் செய்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி இருப்பதாகவும், விரைவில் ஒப்புதல் கிடைத்துவிடும் என எதிர்பார்ப்பதாகவும் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து கல்வராயன்மலை அடிவாரத்தில் மத்திய அரசின் பிரதம மந்திரி சாலை திட்டத்தின் கீழ் ரூ.10 கோடியில் மாயம்பாடி-பரங்கியநத்தம்-கல்படை இடையே 8 கிலோ மீட்டர் தூரத்துக்கும், பரங்கியநத்தம்-மல்லிகைபாடி இடையே 5 கிலோமீட்டர் தூரத்திற்கும் என மொத்தம் 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.

    அப்போது சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். நல்ல தரமானதாக அமைக்க வேண்டும். சாலையின் குறுக்கே புதிதாக அமைக்கப்பட உள்ள பாலத்தையும் தரமாக கட்டித் தர வேண்டும் என ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தினார். அப்போது கல்வராயன்மலை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமன், உதவி பொறியாளர் அருண்ராஜா, அருண்பிரசாந்த், அசோக்காந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×