search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடமாநில தொழிலாளர்கள்
    X
    வடமாநில தொழிலாளர்கள்

    ரெயிலில் திருப்பூர் திரும்பிய வடமாநில தொழிலாளர்களுக்கு கொரோனா-அதிகாரிகள் அதிர்ச்சி

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,737 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் முழு வீச்சுடன் செயல்பட தொடங்கியுள்ளது. பஸ் போக்குவரத்து தொடங்கியுள்ளதால் வெளிமாவட்ட தொழிலாளர்கள் திருப்பூர் திரும்பியுள்ளனர். மேலும் வடமாநில தொழிலாளர்கள் தொடர்ந்து திருப்பூருக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    ரெயிலில் வரும் வடமாநிலத்தினருக்கு திருப்பூர் ரெயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனை கட்டாய மாக்கப்பட்டுள்ளது. இதற்காக அங்கு மருத்துவக் குழுவினர் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

    தொழிலாளரின் பெயர், ஆதார் எண், மொபைல் போன் எண், முகவரி உள்ளிட்ட விவரங்களை பெறும் மருத்துவக்குழுவினர் அதன்பின் கொரோனா பரிசோதனை செய்து அனுப்பி வைக்கின்றனர்.

    முடிவு வெளியாகும் போது தொற்று உறுதியாகியிருந்தால் அவர்களை மருத்துவமனைக்கு அழைக்கின்றனர். கடந்த ஒரு வாரமாக மேற்குவங்காளம், பீகார், ஒடிசா உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து  வந்த ஏராளமான தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் தொழிலாளர்கள் 3 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,737 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 201 பேருக்கு தொற்று உறுதியானது. தொடர்ந்து தொற்று கட்டுக்குள் வரும் நிலையில் வடமாநில தொழிலாளர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது சுகாதாரத்துறை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதையடுத்து திருப்பூர் திரும்பியுள்ள வடமாநில தொழிலாளர்களை சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பனியன் நிறுவனங்களுக்கும் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×