search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூர் மாவட்டத்தில் 2 நாளில் ரூ.13 கோடிக்கு மது விற்பனை

    கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததையடுத்து நேற்று முன்தினம் முதல் திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
    கொரோனா தடுப்பு ஊரடங்கு காரணமாக கடந்த மே மாதம் 10-ந்தேதி முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள்  மூடப்பட்டன. இடையில் கொரோனா பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், கொரோனா பரவல் குறையாத திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்ட ங்களில் டாஸ்மாக் கடைகள்திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.

    இதனால் திருப்பூர் மாவட்ட மதுபிரியர்கள் வெளிமாவட்டங்களுக்கு சென்று மது வாங்கி வந்து அருந்தினர். சிலர் அதனை திருப்பூரில் அதிக விலைக்கு விற்பனை செய்தனர். இந்தநிலையில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததையடுத்து நேற்று முன்தினம் முதல் திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

    இதையடுத்து மாவட்டத்தில் உள்ள 253 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. கொரோனா தடுப்பு வழிகளை பின்பற்றி விற்பனை நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரு நாளில் மட்டும் ரூ.9 கோடியே 8 லட்சத்திற்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. நேற்று ரூ.4.50 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.

    2 நாட்களில் மட்டும் மொத்தம் ரூ.13.50கோடிக்கு மது விற்பனை நடை பெற்றுள்ளது. வழக்கமாக நாள் ஒன்றுக்கு ரூ.15 கோடிக்கு விற்பனை நடைபெறும் நிலையில் குறைவான பஸ் போக்குவரத்து, நேர கட்டுப்பாடு, டோக்கன் நடைமுறை என பல்வேறு காரணங்களால் வழக்க மானதை விட குறைவாகவும், மந்தமாகவும் விற்பனை உள்ளதாக டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×