search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

    அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற வரும் ஆகஸ்ட் 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் 2021-2022ம் ஆண்டுக்கான தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இதில் விண்ணப்பிக்க 2021ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியுடன் 58 வயது பூர்த்தியடைந்தவராகவும், ஆண்டு வருவாய் ரூ.72 ஆயிரத்து மிகாமலும் இருக்க வேண்டும்.

    மேலும், வட்டாட்சியர் அலுவலகத்தில் இணைய வழியில் பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழ் பணியாற்றியமைக்கான ஆதாரங்கள், இரண்டு தமிழறிஞர்களிடம் தமிழ்ப் பணி ஆற்றிவருவதற்கான தகுதி நிலைச் சான்றுகளையும் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

    இதற்கான விண்ணப்பங்களை நேரிலோ அல்லது  தமிழ் வளர்ச்சித் துறையின் இணையதளத்தில் இருந்தோ இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் தமிழறிஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.3,500 மற்றும் மருத்துவப்படியாக ரூ.500 அவரது வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.

    எனவே பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட  கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் வரும் ஆகஸ்ட் 31-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×