search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடுப்பூசி
    X
    தடுப்பூசி

    2 லட்சம் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு

    தொழிலாளர் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதன் மூலம் திருப்பூரை விரைவில் தொற்றில்லா நகராக மாற்றிக்காட்டலாம் என்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி துறை சார்ந்து 8 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். கொரோனாவிடமிருந்து தொழிலாளர்களையும், தொழிலையும் பாதுகாக்கும் வகையில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகளிடம் தொகை செலுத்தி பெற்று தொழிலாளருக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

    இதுவரை 19 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.ஏற்றுமதி ஆடை உற்பத்தி, ஜாப்ஒர்க் நிறுவனங்கள் 100 சதவீத திறனுடன் இயங்க அரசு அனுமதித்துள்ளது. இதையடுத்து வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து திருப்பூருக்கு தொழிலாளர் வருகை அதிகரித்துள்ளது.

    இந்தநிலையில் 2 லட்சம் தொழிலாளருக்கு தடுப்பூசி என்ற லட்சியத்தை விரைவில் எட்டுவதற்காக அப்பல்லோ மருத்துவமனையுடன் சி.ஐ.ஐ., புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து சி.ஐ.ஐ., திருப்பூர் மாவட்ட கவுன்சில் தலைவர் திருக்குமரன், முன்னாள் தலைவர் வெங்கடேஷ் கூறியதாவது:-

    திருப்பூரில் முதல்கட்டமாக இந்திய தொழில் கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளித்து  தனியார் மருத்துவமனைகளிடமிருந்து தடுப்பூசி பெற்றுத்தரப்பட்டது. இதுவரை ஆடை உற்பத்தி, கறிக்கோழி வளர்ப்பு உட்பட பல்வேறு வகை நிறுவனங்களில் பணிபுரியும் 19 ஆயிரம் தொழிலாளருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    அப்பல்லோ மருத்துவமனை சலுகை விலையில் 2 லட்சம் என்கிற இலக்கை அடைய தேவைப்படும் தடுப்பூசிகளை வழங்க சம்மதித்துள்ளது. இதையடுத்து அம்மருத்துவமனையுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    சி.ஐ.ஐ., உறுப்பினர் அல்லாத ஆடை உற்பத்தி மற்றும் அனைத்து வகை நிறுவனங்களுக்கும் தனியார் மருத்துவமனையிடம் இருந்து தேவையான தடுப்பூசி பெற்றுத்தரப்படும். 

    மேலும் விவரங்களுக்கு  98432 51971 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தொழிலாளர் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதன் மூலம் திருப்பூரை விரைவில் தொற்றில்லா நகராக மாற்றிக்காட்டலாம் என்றனர்.
    Next Story
    ×