என் மலர்

  செய்திகள்

  பப்ஜி மதன்
  X
  பப்ஜி மதன்

  பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  யூடியூப் சேனலில் வீடியோக்களை வெளியிட்டு கோடிக்கணக்கில் மதன் பணம் சம்பாதித்தது தெரியவந்தது.
  சென்னை:

  யூடியூப்பில் ஆபாச வீடியோக்களை வெளியிட்ட பப்ஜி மதன் கடந்த மாதம் 18-ந் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை போலீசார் காவலில் எடுத்தும் விசாரணை நடத்தினார்கள்.

  யூடியூப் சேனலில் வீடியோக்களை வெளியிட்டு கோடிக்கணக்கில் மதன் பணம் சம்பாதித்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 2 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரது வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன.

  சிறையில் அடைக்கப்பட்ட பப்ஜி மதன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்து இருந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

  இந்த நிலையில் பப்ஜி மதனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் பரிந்துரை செய்தனர். இதனை ஏற்று கமி‌ஷனர் சங்கர் ஜிவால், பப்ஜி மதனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

  பப்ஜி மதனுடன் அவரது மனைவி கிருத்திகாவும் கைக்குழந்தையுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். மதனின் யூடியூப் சேனலுக்கு இவர்தான் மூளையாக செயல்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

  மதனுக்கு ஜாமீன் கிடைக்காத நிலையில் கிருத்திகாவுக்கு ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  Next Story
  ×