search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஓ.டி.பி., எண் மூலம் பொதுமக்களுக்கு தடுப்பூசி

    பொதுமக்கள் மத்தியில் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் ஆர்வம் அதிகரித்திருக்கிறது.
    அவிநாசி:

    அவிநாசி புனித தோமையார் துவக்கப்பள்ளியில் ஓட்டுச்சாவடி அடிப்படையில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டனர்.போலீசார் சமூக இடைவெளியுடன் நிற்க வைத்தனர்.பொதுமக்களின் ‘ஆதார்’ எண் பதிவு செய்யப்பட்டு, அவர்களின் மொபைல் எண்ணுக்கு ‘ஓ.டி.பி.,’ எண் அனுப்பப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறியதாவது:-

    பொதுமக்கள் மத்தியில் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. பலரும் இரண்டாவது ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர். பலருக்கு தாங்கள் முதல் டோஸ் செலுத்திக்கொண்ட தடுப்பூசியின் பெயரை சொல்ல தெரியவில்லை. 

    இந்த குழப்பத்தை தவிர்க்கதான் ‘ஓ.டி.பி.,’ அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதன் மூலம் மக்களின் மொபைல் போனுக்கு தாங்கள் செலுத்திக்கொண்ட தடுப்பூசியின் பெயர், செலுத்திக் கொண்ட தேதி உள்ளிட்ட விவரங்கள் அனுப்பப்படும். 

    தடுப்பூசி செலுத்திக்கொள்ள வரும் மக்கள் ஆன்ட்ராய்டு அல்லது ஸ்மார்ட்போன் எடுத்து வர வேண்டும்.ஒரு மொபைல் எண்ணை அடிப்படையாக வைத்து நான்கு பேருக்கு தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்றனர். 
    Next Story
    ×