search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    தருமபுரியில் இதுவரை 2.43 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

    தருமபுரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிகள் போடுவது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் தடுப்பூசி போடுவதற்கு, மக்கள் அதிகமாக வருகின்றனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    தற்போது மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து கட்டுக்குள் உள்ளது. மாவட்ட மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கோவிஷீல்டு மொத்தம் 2,07,920 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கோவாக்சின் மொத்தம் 35,270 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. மொத்தம் 2,43,190 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. நேற்று தடுப்பூசிகள் வந்துள்ளது. அதை இருப்பு வைத்து இன்று போடப்படுகிறது.

    தருமபுரி மாவட்டத்தில் 51 ஆரம்ப சுகாதார நிலையம், அரூர், பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 4 தாலுகா அரசு மருத்துவமனை, தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து தருமபுரி மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜெமினி கூறியதாவது:-

    தருமபுரி மாவட்டத்தில், கொரோனா தடுப்பூசிகள் போடுவது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் தடுப்பூசி போடுவதற்கு, மக்கள் அதிகமாக வருகின்றனர். ஆனால் குறைவாக தான் தடுப்பூசி வருகிறது. இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 2 லட்சத்து 43 ஆயிரத்து 190 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதில் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்கள் 1,01,461 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    45 வயது முதல் 60 வயது வரை உள்ள 84,580 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தை பொறுத்தவரை தடுப்பூசி மருந்து வீணாக்கப்படுவதில்லை. ஒரு டோஸ் போட்டவர்கள், 2வது டோஸ் அதற்கான நிர்ணயம் செய்யப்பட்ட காலக்கட்டத்தில் கண்டிப்பாக போட்டுக்கொள்ள வேண்டும். பொது இடங்களில் அரசின் நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் மார்க்கெட், திருமணம், துக்க நிகழ்ச்சிகளில் கூட்டமாக கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.



    Next Story
    ×