search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தமிழகம் முழுவதும் 3-வது நாளாக தட்டுப்பாடு: தடுப்பூசி போடுவது நிறுத்தம்

    தமிழகத்திற்கு மத்திய அரசிடமிருந்து இதுவரை ஒரு கோடியே 46 லட்சத்து 39 ஆயிரத்து 940 தடுப்பூசிகள் பெறப்பட்டது. இதில் ஒரு கோடியே 45 லட்சத்து 50 ஆயிரத்து 494 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா 2-வது அலை தாக்கத்திற்கு பிறகு தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

    18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் தற்போது கூட்டம் அதிகரித்து வருகிறது.

    தமிழகத்திற்கு மத்திய அரசிடமிருந்து இதுவரை ஒரு கோடியே 46 லட்சத்து 39 ஆயிரத்து 940 தடுப்பூசிகள் பெறப்பட்டது. இதில் ஒரு கோடியே 45 லட்சத்து 50 ஆயிரத்து 494 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

    ஜூன் மாதத்தில் 42 லட்சம் டோஸ்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால் மத்திய அரசு கூடுதலாக 5 லட்சம் டோஸ்களை கொடுத்தது. இதுதவிர 2.5 லட்சம் டோஸ்கள் மத்திய தொகுப்பில் இருந்து நேற்று வழங்கப்பட்டன.

    சுமார் 50 லட்சம் டோஸ்கள் கடந்த மாதம் போடப்பட்டுள்ளது. இந்த மாதம் 71.5 லட்சம் டோஸ்கள் தமிழகத்துக்கு ஒதுக்கப்படுகிறது.

    இதில் 17.75 லட்சம் டோஸ்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட உள்ளது. 53 லட்சம் டோஸ்கள் மட்டும் அரசு மையங்களுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.

    கடந்த மாதத்தைவிட 3 லட்சம் டோஸ் அதிகமாக ஒதுக்கப்படுகிறது. ஆனாலும் தடுப்பூசி தட்டுப்பாடு நீடிப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

    இதையும் படியுங்கள்... டெல்டா வைரசுக்கு எதிராக கோவேக்சின் தடுப்பூசி செயல்படுகிறது - அமெரிக்கா கண்டுபிடிப்பு

    தமிழகம் முழுவதும் தடுப்பூசி தட்டுப்பாடு கடந்த 3 நாட்களாக நிலவி வருகிறது. பொதுமக்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்த பின்னர் தடுப்பூசி இருப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டதால், பல இடங்களில் வாக்குவாதம் ஏற்பட்டது. தடுப்பூசி போட வந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மதுரை ராஜாஜி மருத்துவமனை மாநகராட்சி பள்ளியில் தடுப்பூசி போடுவதற்கு அதிகாலை 3 மணியில் இருந்து வரிசையில் காத்திருந்த மக்கள் தடுப்பூசி இருப்பு இல்லை என்று அறிவிப்பு வைத்தவுடன் ஆத்திரம் அடைந்து கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

    தடுப்பூசியை தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை முழக்கமிட்டனர். 3 ஆயிரத்து 320 டோஸ் மட்டும் இந்த மாவட்டத்திற்கு விநியோகிக்கப்பட்டதால், பெரும்பாலான மையங்கள் மூடப்பட்டன.

    கோப்புப்படம்

    சென்னை மாநகராட்சி சார்பாக ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 45 மையங்கள் மற்றும் 19 நகர்ப்புற சுகாதார மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில் தற்போது தட்டுப்பாடு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி இருப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெப்சைட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை 36 ஆயிரத்து 610 கோவேக்சின் தடுப்பூசி சென்னை வந்துள்ளது.

    பெரும்பாலான இடங்களில் தடுப்பூசி இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள இந்த காலக்கட்டத்தில் பொதுமக்கள் ஆர்வமாக தடுப்பூசி போட முன்வருகிறார்கள். ஆனால் தட்டுப்பாடு நீடித்து வருவது கவலை அளிக்கிறது.

    தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 8 லட்சம் தடுப்பூசிகள் போடும் அளவுக்கு நிர்வாகக் கட்டமைப்புகள் உள்ளன. ஆனால் மத்திய அரசிடம் இருந்து குறைந்த அளவில் தடுப்பூசிகள் வருவதால் பொதுமக்களுக்கு குறித்த காலத்தில் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×