search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது செய்யப்பட்ட அரவிந்த், முனியப்பன் ஆகியோரை படத்தில் காணலாம்.
    X
    கைது செய்யப்பட்ட அரவிந்த், முனியப்பன் ஆகியோரை படத்தில் காணலாம்.

    தருமபுரி அருகே பெங்களூருக்கு கடத்த முயன்ற 2500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

    தருமபுரி அருகே பெங்களூருக்கு கடத்த முயன்ற 2500 கிலோ ரே‌ஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மினி லாரியுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    தருமபுரி:

    தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு கூடுதல் டிஜிபி ஆபாஷ்குமார் உத்தரவின்பேரில், போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரேவதி மற்றும் சிறப்பு தனிப்படையினர் தருமபுரி -கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குண்டலப்பட்டி பிரிவு சாலையில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு மினி லாரியை சிறப்பு தனிப்படை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த மினி லாரியில் 2500 கிலோ ரே‌ஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. உடனே சிறப்பு படையினர் நடத்திய விசாரணையில் இந்த ரே‌ஷன் அரிசி மூட்டைகள் பெங்களூருக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து சிறப்பு படையினர் மினி லாரியில் இருந்த தருமபுரி அருகே சோலைக்கொட்டாயை சேர்ந்த ரஜினி மகன் அரவிந்த் (வயது 24), அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகன் முனியப்பன் (30) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள மினி லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ரே‌ஷன் அரிசி மூட்டைகள் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

    இந்த வழக்கில் ரே‌ஷன் அரிசி கடத்தலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்? யார்? என்பது குறித்தும், பெங்களூருவில் இந்த அரிசி மூட்டைகளை வாங்குவது யார் என்பது குறித்தும் சிறப்பு தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×