என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டி.வி.,பெட்டிக்குள் மறைத்து மதுபாட்டில்களை கடத்திய அண்ணன்-தம்பி கைது
Byமாலை மலர்29 Jun 2021 10:04 AM GMT (Updated: 29 Jun 2021 10:04 AM GMT)
மதுபாட்டில்கள் கடத்தல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவது போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்:
கொரோனா பரவலால் திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் மதுபிரியர்கள் திண்டுக்கல் மாவட்டம் பழனி ,ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள மதுக்கடைகளுக்கு மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் சென்று மதுபாட்டில்களை வாங்கி வருகின்றனர்.சிலர் அதனை திருப்பூரில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
இதையடுத்து திருப்பூர் மாவட்ட எல்லையில் போலீசார் அதிரடி வாகன சோதனை நடத்தி மதுபாட்டில்களை வாங்கி வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதுடன் வாகனங்களை பறிமுதல் செய்தும் வருகின்றனர்.
இந்தநிலையில் திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதியில் இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். காருக்குள் டி.வி.,பெட்டிகள் இருந்தது. சந்தேகமடைந்த போலீசார் பெட்டியை திறந்து பார்த்த போது உள்ளே ஏராளமான மது பாட்டில்கள் இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
காரில் இருந்த 2பேரிடம் விசாரித்த போது அவர்கள் திருப்பூர் ஆத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த அண்ணன்-தம்பிகளான ரஞ்சித்குமார் (வயது 30), பிரவீன்குமார் (28) என்பது தெரியவந்தது.
திருப்பூர் மாவட்டத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் 2பேரும் காரில் திண்டுக்கல்லில் இருந்து திருப்பூருக்கு மதுபாட்டில்களை கடத்தி வந்து, ரூ.180 மதிப்புள்ள மதுபாட்டிலை ரூ.500க்கு விற்பனை செய்துள்ளனர்.
போலீசில் சிக்காமல் இருக்க மது கேட்பவர்களின் வீடுகளுக்கே சென்று சப்ளை செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.180 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இவர்களை போல் மேலும் சிலர் திண்டுக்கல்லில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து திருப்பூரில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவது தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. நேற்று பல்லடம், மங்கலம் காவல்நிலையத்தை சேர்ந்த போலீஸ்காரர்கள் முத்துச்சுருளி, துரைமுருகன் ஆகியோர் திண்டுக்கல்லில் இருந்து திருப்பூருக்கு காரில் மதுபாட்டில்களை கடத்தி வந்த போது, கார் கவிழ்ந்ததால் போலீசில் சிக்கினர். தற்போது 2பேரையும் சஸ்பெண்டு செய்து எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.
மதுபாட்டில்கள் கடத்தல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவது போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மாவட்ட எல்லையில் போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X