search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    குடிபோதையில் போலீஸ்காரர்களிடம் தகராறு செய்த 3 பேர் கைது

    ஆற்காடு கிளைவ் பஜார் ஏரிக்கரை தெரு அருகே வரும்போது அங்கு மது குடித்துக்கொண்டிருந்த 3 நபர்கள் போலீஸ்காரர்களிடம் தகராறு செய்துள்ளனர்.
    ஆற்காடு:

    ஆற்காடு முப்பது வெட்டி கீரை தெருவை சேர்ந்த கணபதி (வயது 32) மற்றும் தணிகைவேல் ஆகிய இருவரும் காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர்களாக வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு கணபதி மற்றும் தணிகைவேல் ஆகிய இருவரும் வேலையை முடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்துள்ளனர்.

    அப்போது ஆற்காடு கிளைவ் பஜார் ஏரிக்கரை தெரு அருகே வரும்போது அங்கு மது குடித்துக் கொண்டிருந்த 3 நபர்கள் அவர்களிடம் தகராறு செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கணபதி ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆற்காடு பகுதியைச் சேர்ந்த பாலு (27), சதீஷ் (25), ராஜேஷ் (23) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×