என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தனியார் சுயநிதிப்பள்ளிகளில் ஆன்லைனில் மாணவர் சேர்க்கை
Byமாலை மலர்29 Jun 2021 8:16 AM GMT (Updated: 29 Jun 2021 8:16 AM GMT)
கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் சுயநிதிப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப்பள்ளிகளில் நுழைவு வகுப்புகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு rte.tnschools.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். அதன்படி வரும் ஜூலை 7-ந்தேதி முதல் ஆகஸ்ட் 3-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
குறிப்பாக எல்.கே.ஜி., அல்லது முதல் வகுப்பிற்கு இருப்பிட முகவரியில் இருந்து ஒரு கி.மீ., சுற்றளவுக்குள் இருத்தல் வேண்டும்.விண்ணப்பம் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம் பதிவு செய்யப்பட்ட பெற்றோரின் மொபைல் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., அளிக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×