search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஆண்டிபாளையம் குளம் மாசுபடும் அபாயம்

    வாடிக்கையாளர் வாங்கும் மீன்களை அதே இடத்தில் வெட்டி சுத்தம் செய்து கொடுக்கின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் ஆண்டிபாளையம் குளத்துக்கு நொய்யல் ஆற்றின் மங்கலம், நல்லம்மன் தடுப்பணையில் இருந்து நீர் ஆதாரம் கிடைக்கிறது. இக்குளம் கழிவுகள் இன்றி மாசு குறைந்த குளமாக அமைந்துள்ளது.குளத்தின் கரையை ஒட்டி சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. நீண்ட முயற்சிக்கு பின் குளம் தூர்வாரி அதில் நீர் நிரம்பி நிற்க வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    மேலும் குளத்தின் மையத்தில் தீவுத்திடல் அமைத்து அங்கு மரங்கள் வளர்ந்து பறவைகள் குடியேறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மேம்படும் வகையில் குளம் அமைந்துள்ளது.ஆனால் இந்த முயற்சிகளையெல்லாம் பொருட்படுத்தாமல் குளத்தை மாசுபடுத்தும் வகையிலான செயல்கள் அடிக்கடி அரங்கேறுவது வாடிக்கையாக உள்ளது.

    தற்போது குளத்துக்குள் நீர் தேங்கி நிற்கும் பகுதிக்கு அருகிலேயே சில மீன் வியாபாரிகள் மீன் விற்பனை செய்கின்றனர்.வாடிக்கையாளர் வாங்கும் மீன்களை அதே இடத்தில் வெட்டி சுத்தம் செய்து கொடுக்கின்றனர். வெட்டப்படும் மீன் கழிவுகள் குளத்தினுள் வீசப்படுகின்றன. மேலும் மீன்களை உண்பதற்காக தெரு நாய்களும் கூட்டம் கூட்டமாக குளத்தின் சுற்றுப்பகுதியில் சுற்றி வருகின்றன.இதனால் குளம் மாசுபடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதனை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×