search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    கிட்டாம்பாளையம் ஊராட்சியில் 4 இடங்களில் தடுப்பூசி முகாம்

    கிட்டாம்பாளையம், குளத்துப்பாளையம், வடுகபாளையம் மற்றும் தேஜா சக்தி கல்லூரி என நான்கு இடங்களில் சோமனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை மருத்துவர் நரேஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் முகாம்களை நடத்தி தடுப்பூசி செலுத்தினர்.
    கருமத்தம்பட்டி:

    சூலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிட்டாம்பாளையம் ஊராட்சி பகுதியில் கொரோனா தொற்று பரவலை தடுக்க, ஊராட்சி மன்ற தலைவர் வி.எம்.சி.சந்திர சேகர் பொதுமக்களுக்கு தேவையான தடுப்பூசியை கிராமத்திற்கே கொண்டு வந்து போடுவதற்கு கலெக்டரிடம் கோரிக்கை வைத்தார். இதனை தொடர்ந்து நேற்று கிட்டாம்பாளையம், குளத்துப்பாளையம், வடுகபாளையம் மற்றும் தேஜா சக்தி கல்லூரி என நான்கு இடங்களில் சோமனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை மருத்துவர் நரேஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் முகாம்களை நடத்தி தடுப்பூசி செலுத்தினர். இந்த முகாமிற்கு தலைமை தாங்கிய ஊராட்சி மன்ற தலைவர் வி.எம்.சி சந்திரசேகர்கூறுகையில், மாவட்ட கலெக்டர், திட்ட இயக்குனர் மற்றும் சுகாதார துறையினரின் முழு ஒத்துழைப்போடு ஊராட்சி பகுதி மக்கள் 400 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. அதற்கு அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மேலும் தடுப்பூசி போடும் பணி தொடர நடவடிக்கை மேற்கொள்வேன் என்றார்.
    Next Story
    ×