என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குளித்தலை-நொய்யல் பகுதிகளில் மது விற்ற பெண் உள்பட 3 பேர் கைது
Byமாலை மலர்28 Jun 2021 12:43 PM GMT (Updated: 28 Jun 2021 12:43 PM GMT)
குளித்தலை-நொய்யல் பகுதிகளில் மது விற்ற பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்தலை:
குளித்தலை அருகே உள்ள கோட்டைமேடு பகுதியில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் தனது தோட்டத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த சிவானந்தம் (வயது 53) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நொய்யல் அருகே புங்கோடை பகுதியில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் திருட்டுத்தனமாக மது விற்றுக்கொண்டிருந்த புங்கோடை பகுதியை சேர்ந்த ஜெயந்தி (40), அதே பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் (38) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 8 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story
×