என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாணியம்பாடியில் மோட்டார் சைக்கிள் மீது கிரேன் மோதி வாலிபர் பலி- டிரைவர் கைது
Byமாலை மலர்28 Jun 2021 12:25 PM GMT (Updated: 28 Jun 2021 12:25 PM GMT)
வாணியம்பாடியில் மோட்டார் சைக்கிள் மீது கிரேன் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி:
வாணியம்பாடியை அடுத்த கோணாமேடு பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் எழிலரசன் (வயது 27). இவர் தனியார் தோல் தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்தார். நேற்று காலை வாணியம்பாடி கோணாமேடு பகுதியில் இருந்து வளையாம்பட்டு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கிரேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட எழிலரசன் படுகாயம் அடைந்தார். அவரை உடனடியாக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டார்.
இதுகுறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிரேன் ஓட்டி வந்த வாணியம்பாடியை அடுத்த பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த ரஞ்சித் (வயது 30) என்பவரை கைது செய்தனர்.
Next Story
×