search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    முருகராஜ்
    X
    முருகராஜ்

    சங்கரன்கோவில் அருகே வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்: புதுமாப்பிள்ளை உயிரிழப்பு

    சங்கரன்கோவில் அருகே சென்றபோது எதிரே வந்த முருகராஜ் மோட்டார்சைக்கிளும், வேனும் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.
    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மணலூர் கிராமம் இந்திரா காலனியை சேர்ந்த மாரியப்பன் மகன் முருகராஜ் (வயது 29). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி அனுசுயாதேவி. இவர்களுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.

    புதுமாப்பிள்ளையான முருகராஜ் நேற்று காலை மணலூரில் இருந்து சங்கரன்கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் ராஜபாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஒப்பனையாள்புரம் துக்க நிகழ்ச்சிக்கு செல்வதற்காக புளியம்பட்டியில் இருந்து ராஜபாளையம் சாலையில் வேனில் சிலர் சென்று கொண்டிருந்தனர். வேனை புளியம்பட்டியை சேர்ந்த பெரியசாமி மகன் குமார் (29) என்பவர் ஓட்டினார்.

    சங்கரன்கோவில் அருகே சென்றபோது எதிரே வந்த முருகராஜ் மோட்டார்சைக்கிளும், வேனும் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்ட முருகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வேனின் முன்பகுதியும் சேதம் அடைந்தது.

    இதுகுறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சங்கரன்கோவில் அருகே வேன்-மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×