என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொன்னேரி அருகே குளத்தில் தவறி விழுந்த தொழிலாளி பலி
Byமாலை மலர்28 Jun 2021 10:26 AM GMT (Updated: 28 Jun 2021 10:26 AM GMT)
பொன்னேரி அருகே குளத்தில் தவறி விழுந்த தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த பனப்பாக்கம் ஊராட்சியில் அடங்கிய இலுப்பாக்கம் காலனியில் வசித்தவர் விநாயகம் (வயது 31). கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு கனகா என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று வீட்டிற்கு அருகே உள்ள குளத்தின் வழியாக நடந்து சென்றபோது, கால் தவறி நீரில் விழுந்த அவர், சேற்றில் சிக்கிக் கொண்டார்.
தகவல் அறிந்த பொதுமக்கள் விரைந்து வந்து குளத்தில் விழுந்த விநாயகத்தை தேடி பார்த்தும் கிடைக்காத நிலையில், பொன்னேரி தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து நீரில் மூழ்கி இறந்து கிடந்த விநாயகத்தின் உடலை மீட்டனர். தகவலறிந்த திருப்பாலைவனம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×