search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் கடைகள் திறக்கப்பட்டிருந்த காட்சி.
    X
    திருப்பூரில் கடைகள் திறக்கப்பட்டிருந்த காட்சி.

    திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து கடைகளும் திறப்பு - இயல்பு நிலை திரும்பியது

    இனிப்பு மற்றும் கார வகை விற்பனை செய்யும் கடைகளும் திறக்கப்பட்டன.இங்கு பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மாதம் 10-ந்தேதி முதல் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. தொற்று பரவல் வெகுவாக குறைந்த தன் காரணமாக தொற்று குறைவு உள்ள 27 மாவட்ட ங்களிலும் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. தொற்று பரவல் அதிகமுள்ள கோவை, திருப்பூர், ஈரோடு உள்பட 11 மாவட்டங்களில் மளிகை, இறைச்சி கடைகள், மோட்டார் சைக்கிள், சைக்கிள் பழுது பார்க்கும் கடைகள், வாடகை கார், ஆட்டோக்கள் இ-பதிவுடன் இயங்கியது.

    திருப்பூரில்  சலூன் கடை திறக்கப்பட்டிருந்த காட்சி.

    இந்தநிலையில் ஊரடங்கு கூடுதல் தளர்வுகளுடன் வருகிற 5-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.அதன்படி தொற்று அதிகமுள்ள திருப்பூர், கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று முதல் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன.
    புதிய தளர்வுகளின்படி திருப்பூர் மாவட்டத்தில் டீக்கடைகள்,சாலையோர உணவு கடைகள் இன்று முதல் இயங்க தொடங்கின.இந்த கடைகள் காலை 6மணி முதல் மாலை 7மணி வரை மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.பார்சல் மட்டும் வழங்க வேண்டுமென உத்தர விடப்பட்டுள்ளது-. 

    இதுமட்டுமின்றி எலக்ட் ரிக்கல், ஹார்டுவேர் கடைகள், கல்வி புத்தகங்கள், எழுது பொருட்கள், காலணிகள்,பாத்திரம்.பேன்சி, அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறக்கப்பட்டன. போட்டோ-வீடியோ, ஜெராக்ஸ் கடைகள், மிக்சி, கிரைண்டர், டி.வி.,போன்ற வீட்டு உபயோக மின்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பழுது நீக்கும் கடைகள், வாகன விற்பனை மற்றும் பழுது பார்க்கும் மையங்கள், வாகன உதிரிபாகங்கள்  விற்பனை செய்யும் கடைகள் திறக்கப்பட்டன. 

    செல்போன் மற்றும் அதனை சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், கணினி வன்பொருட்கள்,மென் பொருட்கள், மின்னணு சாதனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள், கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள்  திறக்கப்பட்டன. 

    திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மேற்கூறிய கடைகள் திறக்கப்பட்டன.இந்த கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7மணி வரை மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் அத்தியாவசிய துறை சார்ந்த அரசு அலுவலகங்கள் 100சதவீத பணி யாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் போக்குவரத்து வசதி இல்லாததால் அலுவலகங்களுக்கு குறைந்த அளவிலான ஊழியர்களே வந்திருந்தனர். தனியார் நிறுவனங்கள், வங்கி, காப்பீட்டு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கின.போக்குவரத்து வசதியில்லாததால் பெரும்பாலான தனியார் நிறுவன பணியாளர்கள் மிகவும் சிரமப்பட்டு பணிக்கு வந்தனர்.  

    சலூன்கள், அழகு நிலையங்கள் திறக்கப்பட்டன. 11/2 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டதால் இன்று காலை மாவட்டத்தில் உள்ள சலூன் கடைகளில் ஏராளமானோர் முடிதிருத்து வதற்காக குவிந்தனர். ஆனால் 50சதவீத வாடிக்கையாளர்களுடன் மட்டும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்ததால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 

    பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்கியது. பூங்காக்கள், விளையாட்டு திடல்களில் காலை 6 மணி முதல் 9மணி வரை மட்டும் நடைபயிற்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை மாவட்டத்தில் உள்ள பூங்காக்கள், விளையாட்டு திடல்களில் பொது மக்கள் நடைபயிற்சி மேற்கொண்டனர்.  

    இனிப்பு மற்றும் கார வகை விற்பனை செய்யும் கடைகளும் திறக்கப் பட்டன.இங்கு பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பபட்டுள்ளது. உணவுவிநியோகம் செய்யும் நிறுவனங்கள் காலை 6 மணி முதல் இரவு 9மணி வரை தொடர்ச்சியாக இயங்க தொடங்கியுள்ளன.

    திருப்பூரில்  பேக்கரி-டீக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    ஜவுளி, நகைக்கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும்  திறக்கப்பட்டுள்ளதால் திருப்பூர் மாவட்டம் சற்று இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இன்று காலை சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. வாகனங்களும் அதிக அளவில் இயங்கின.
    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் வரும் நிலையில் இன்று முதல் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. எனவே கடைகளில் பொதுமக்கள் கூட்டம் சேர்வதை தடுக்கும் வகையில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

    மேலும் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்திற் குட்பட்ட தாராபுரம், பல்லடம், காங்கேயம், உடுமலை உள்பட அனைத்து பகுதிகளிலும் போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  
    Next Story
    ×