என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாத்துக்குடி ஆரஞ்சு சாகுபடியில் உடுமலை விவசாயிகள் ஆர்வம்
Byமாலை மலர்28 Jun 2021 8:14 AM GMT (Updated: 28 Jun 2021 8:15 AM GMT)
குளிர்பிரதேசங்களில் விளையும் சாத்துக்குடியை விட நமது பகுதியில் விளையும் சாத்துக்குடி சுவை மிகுந்ததாகவும் சாறு அதிகம் உள்ளதாகவும் உள்ளது.
உடுமலை:
உடுமலை,மடத்துக்குளம்,குடிமங்கலம் வட்டாரங்களில் அதிக அளவில் காய்கறிகள் சாகுபடி நடைபெற்று வருகிறது.ஆனாலும் பணப்பயிர்கள் எனப்படும் பழப்பயிர்கள் சாகுபடியில் ஒரு சில விவசாயிகளே ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் உடுமலை பகுதியில் ஒரு சில விவசாயிகள் சாத்துக்குடி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
சாத்துக்குடி சாகுபடிக்கு தண்ணீர் தேங்காத நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண் பாங்கான நிலம் சிறந்ததாக இருக்கும். நமது பகுதியின் தட்பவெப்ப நிலை சாத்துக்குடி சாகுபடிக்கு உகந்ததாகவே உள்ளது.
சாத்துக்குடி சாகுபடியை பொறுத்தவரை பராமரிப்பு குறைவான பயிர் என்று சொல்லலாம்.சாத்துக்குடி நாற்று நடவு செய்து 3 ஆண்டுகளில் பூக்கத்தொடங்கும்.அதிலிருந்து 7-வது மாதத்தில் அறுவடை செய்யத்தொடங்கலாம்.
குளிர்பிரதேசங்களில் விளையும் சாத்துக்குடியை விட நமது பகுதியில் விளையும் சாத்துக்குடி சுவை மிகுந்ததாகவும் சாறு அதிகம் உள்ளதாகவும் உள்ளது.
மேலும் ஒரு ஏக்கருக்கு 15 முதல் 20 டன் வரை மகசூல் கொடுக்கும். வழக்கமான முறையில் நெல், கரும்பு, காய்கறிகள் என்று சாகுபடி செய்யும்போது சந்தைப்போட்டிகளை அதிகம் சந்திக்க வேண்டியதிருக்கும்.
ஆனால் இதுபோன்ற புதிய வகைப்பயிர்களை சாகுபடி செய்யும்போது உள்ளூரிலேயே பெருமளவு விளைச்சலை விற்பனை செய்துவிட முடிகிறது என்றனர்.
Next Story
×