search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஏற்றுமதியாளர் விவரங்களை புதுப்பிக்க கூடுதல் அவகாசம்-ஏ.இ.பி.சி.வலியுறுத்தல்

    ஊரடங்கால் ஒரு மாதத்துக்கும் மேலாக நிறுவனங்கள் இயங்கவில்லை. தளர்வுக்கு பின்னும் குறைந்த தொழிலாளருடனேயே நிறுவனங்கள் செயல்படுகின்றன.
    திருப்பூர்:

    பொருட்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதற்கு நிறுவனங்கள் வெளிநாட்டு வர்த்தக துறை இயக்குனரகத்தால் வழங்கப்படும் இறக்குமதியாளர் - ஏற்றுமதியாளர் கோடு(ஐ.இ.சி.,) பெறுவது அவசியம். ஐ.இ.சி., பெறுவதற்காக வழங்கிய சுய விவரங்களை ஆண்டுதோறும் புதுப்பிப்பது கட்டாயமாகிறது.இந்தநிலையில் இறக்குமதியாளர் - ஏற்றுமதியாளர் விவரங்களை புதுப்பிக்க ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு 3 மாதம் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி., ) கோரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்(ஏ.இ.பி.சி.,) தலைவர் சக்திவேல், வெளிநாட்டு வர்த்தக இயக்குனரக தலைவர் அமித்யாதவுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    ஊரடங்கால் ஒரு மாதத்துக்கும் மேலாக நிறுவனங்கள் இயங்கவில்லை. தளர்வுக்கு பின்னும் குறைந்த தொழிலாளருடனேயே நிறுவனங்கள் செயல்படுகின்றன. தினமும் ஏராளமானோர் புதுப்பிக்க முயற்சிப்பதால் ஐ.இ.சி., இணையதள தள இயக்கம் மந்தமாகியுள்ளது.இதனால் விவரங்களை புதுப்பிப்பதிலும் தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்வதிலும் சிக்கல் ஏற்படுகிறது. 3 நாட்களே உள்ளதால் வரும் 30-ந்தேதிக்குள் அனைத்து நிறுவனங்களாலும் விவரங்களை புதுப்பிக்க இயலாது. மூன்று மாதம் கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×