search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்

    உலர் களங்களில் இருந்து தேங்காய் தொட்டி ஏற்றிச்செல்லும் லாரி, வேன்கள் எவ்வித விதிமுறைகளையும் பின்பற்றுவதில்லை
    உடுமலை:
     
    உடுமலை சுற்று வட்டாரத்தில் விவசாயம் சார்ந்த பல்வேறு தொழில்கள் அதிகளவு உள்ளன. வேளாண் விளைபொருட்களுடன் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு மூலப்பொருட்களை ஏற்றி வரவும் சரக்கு வாகனங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

    இதில் பெரும்பாலான வாகனங்கள் விதிமுறைகளை மீறி அதிக பாரம் ஏற்றிச்செல்வதால்  பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. 
    குறிப்பாக உலர் களங்களில் இருந்து தேங்காய் தொட்டி ஏற்றிச்செல்லும்  லாரி, வேன்கள் எவ்வித விதிமுறைகளையும் பின்பற்றுவதில்லை.இதனால்  விபத்துகள் ஏற்படுகின்றன.

     இதே போல் பிற மாவட்டங்களில் இருந்து வைக்கோல் ஏற்றி வரும் லாரிகளும் சாலையில் செல்லும் பிற வாகனங்களை அச்சுறுத்தும் வகையில் லோடு ஏற்றி வருகின்றன.இத்தகைய வாகனங்களால் குறுகலான கிராமப்புற  சாலைகளில் இரு சக்கர வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.
     
    மேலும் குவாரிகளில் இருந்து  அதிக லோடு ஏற்றி இயக்கப்படும் டிப்பர் லாரிகளால் பல சாலைகள் சேதமடைந்துள்ளன. 

    கூடுதல் பாரத்துடன் அதிவேகமாகவும் இவ்வாகனங்கள் இயக்கப்படுவதை தடுக்க வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வாகனத்தணிக்கை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    Next Story
    ×