search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பேராவூரணி அருகே ஊராட்சி மன்ற தலைவர் வீட்டை முற்றுகையிட்ட பெண்கள்

    பேராவூரணி அருகே குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி ஊராட்சி மன்ற தலைவர் வீட்டை முற்றுகையிட்ட பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.

    பேராவூரணி:

    பேராவூரணி அடுத்த மாவடுகுறிச்சி ஊராட்சியை சேர்ந்த நாடாகாடு ஒன்பதாவது வார்டு பகுதியில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் மாவடு குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம் பழனிவேல் வீட்டிற்கு நேரடியாக சென்ற பெண்கள் உள்ளிட்ட 100 பேர் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுவது குறித்து நேரில் முறையிட்டனர். வீட்டை முற்றுகையிட்டு கோ‌ஷம் எழுப்பினர்.

    இதுகுறித்து நாடாகாடு பகுதியைச் சேர்ந்த வீரபாகு கூறும்போது, எங்கள் கிராமத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக குடிதண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறோம். குடி தண்ணீர் எடுக்க தினந்தோறும் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்று வரவேண்டிய நிலை உள்ளது. எங்களின் அவல நிலையை ஊராட்சி மன்ற தலைவரிடம் நேரடியாக தெரிவிக்கவே அவரின் வீட்டிற்கு சென்று முறையிட்டு வந்துள்ளோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் உடனடியாக குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×