search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்.
    X
    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்.

    கோவில்களை திறக்க கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

    அம்மன் வேடம் அணிந்த குழந்தை கையில் பூச்சட்டி ஏந்தி கோவில்களை திறக்க கோரி கோஷம் எழுப்பியது.
    திருப்பூர்:

    கொரோனா தடுப்பு ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கோவில்களில் பக்தர்கள் வழிபட தடைசெய்யப்பட்டுள்ளது.தினசரி பூஜைகள் மட்டும் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில் தமிழகம் முழுவதும் கோவில்களை திறக்க கோரி இன்று இந்து முன்னணி சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    திருப்பூர் புஷ்பா சந்திப்பில் உள்ள மாகாளி அம்மன் கோவில் முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட இந்து முன்னணி  செயலாளர் மணிகண்டன், நகரச் செயலாளர் மோகன், நகர பொறுப்பாளர் சந்துரு உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அம்மன் வேடம் அணிந்த குழந்தை கையில் பூச்சட்டி ஏந்தி பங்கேற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், நாட்டை அழிக்கக்கூடிய டாஸ்மாக் கடைக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு,வழிபாட்டுத்தலங்களான கோவில்களை திறக்க மறுத்து இந்துக்களின் உணர்வை புண்படுத்துகிறது.

    எனவே கோவில்களை திறக்க கோரி தமிழக அரசுக்கு எதிராக கோஷம்  எழுப்பினர்.இதேப்போல் திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவில் முன்பு கற்பூரம் ஏற்றி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    Next Story
    ×