search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதானவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களையும் படத்தில் காணலாம்.
    X
    கைதானவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களையும் படத்தில் காணலாம்.

    தாராபுரத்தில் 189 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்

    ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 2பேர் கார் மூலம் கடைகளுக்கு குட்கா,பான் மசாலா உள்ளிட்ட போதை பொருட்களை சப்ளை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அண்ணாநகர், வசந்தா தியேட்டர், என்.என்.பேட்டை ஆகிய பகுதியில் தடைசெய்யப்பட்ட குட்கா, பான் மசாலா ஆகியவை வடமாநில நபர்களால் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தாராபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து மாவட்ட எஸ்.பி., சசாங் சாய் உத்தரவின் பேரில் தாராபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு தனராசு தலைமையில் இன்ஸ்பெக்டர் மகேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக், ஜெயக்குமார் ஆகியோர் அப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 2பேர் கார் மூலம் கடைகளுக்கு குட்கா,பான் மசாலா உள்ளிட்ட போதை பொருட்களை சப்ளை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஆசாராம்(வயது 31) கோஷா ராம் (41) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 2பேரையும் போலீசார் கைது செய்தனர். 

    மேலும் 2 பேரும் விற்பனை செய்த கடையில் இருந்து 189 கிலோ போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வியாபாரிகளான தாராபுரத்தை சேர்ந்த பாலகமல்குமார்,முத்து வெங்கடேஷ் ஆகிய 2பேரையும் கைது செய்தனர்.
    Next Story
    ×