search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கொரோனா 2-வது அலையில் 801பேருக்கு சித்தா சிகிச்சை

    கொரோனா நோயாளிகளின் விருப்பத்தின் பேரிலேயே அவர்களுக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    திருப்பூர்:
     
    திருப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சித்த மருத்துவ சிகிச்சை மையம் காங்கேயம் ரோட்டில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் தொடங்கப்பட்டது. சித்த மருத்துவ சிகிச்சை மூலம் கொரோனா நோயாளிகள் பலர் விரைவில் பூரண குணமாகி வந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் சித்த மருத்துவ சிகிச்சை மீது பலருக்கும் விருப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலரும் சித்தா சிகிச்சை மையத்திற்கு வருகிறார்கள். 

    கொரோனா நோயாளிகளின் விருப்பத்தின் பேரிலேயே அவர்களுக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதும் அவர்களிடம் சிகிச்சை முறை குறித்து கேட்கப்படும். தொடர்ந்து அவர்கள் விரும்பினால் சித்த மருத்துவ கிசிச்சை அவர்களின் ஒப்புதலின்பேரில் வழங்கப்படும்.அனைத்து வசதிகளும், டாக்டர்களும் போதுமான அளவிற்கு இருந்து வருகிறார்கள். அரசு அறிவுரைகளின்படி சிகிச்சைகள் தரமாக சித்தாவில் வழங்கப்பட்டு வருகிறது. 

    இதுவரை சித்தா சிகிச்சை மையத்தில் கொரோனா 2-வது அலையில் 801பேர் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் தற்போது 11பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் சித்தா சிசிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்ட யாரும் பலியாகவில்லை என்று மாவட்ட சித்த மருத்துவ அதிகாரி தனம் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×