search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் பிரித்து அனுப்பும் பணி நடைபெற்ற காட்சி.
    X
    பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் பிரித்து அனுப்பும் பணி நடைபெற்ற காட்சி.

    பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்களை பிரித்து அனுப்பும் பணிகள் தீவிரம்

    பள்ளிகளில் 2021 - 2022-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கு பெயர்களை பதிவு செய்யும் பணிகள் நடந்து வருகிறது.
    உடுமலை:

    உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஆகிய 3 வட்டாரங்களை கொண்ட உடுமலை கல்வி மாவட்டத்தில் 16 அரசு மேல்நிலைப்பள்ளிகளும், 5 அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளும்,17 அரசு உயர்நிலைப்பள்ளிகளும், 253 அரசு நடுநிலைப்பள்ளிகளும் உள்ளன. இந்த பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 18 ஆயிரம் மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

    பள்ளிகளில் 2021 - 2022-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கு பெயர்களை பதிவு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    இந்தநிலையில் இந்த கல்வி ஆண்டில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு வழங்குவதற்கான பாடப்புத்தகங்கள் உடுமலை பழனி சாலையில் உள்ள ஸ்ரீவிசாலாட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு கொண்டு வரப்பட்டு அங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்தன.

    இந்த பாடப்புத்தகங்கள் உடுமலை கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல் நிலைப்பள்ளிகள், உயர்நிலை பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் ஆகியவற்றிற்கு அந்தந்த பள்ளிகளின் தேவைகளுக்கு ஏற்ப பிரித்து அனுப்பும் பணிகள் நடந்து வருகிறது. அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் உடுமலை ஸ்ரீவிசாலாட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு வந்து பாடப்புத்தகங்களை வாங்கி சரக்கு வாகனங்கள் மூலமாக அவரவர் பள்ளிகளுக்கு கொண்டு செல்கின்றனர்.
    Next Story
    ×