search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடந்து சென்றவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட காட்சி.
    X
    நடந்து சென்றவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட காட்சி.

    முககவசம் அணியாமல் சென்றவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை

    முககவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கி இலவச முககவசமும் வழங்கப்பட்டது.
    பல்லடம்:

    பல்லடம் நகராட்சி நிர்வாகம், காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்லடம் நால்ரோடு பகுதியில் முக கவசம் அணியாமல் நடந்து சென்றவர்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் உள்ளிட்டோருக்கு கட்டாய கொரோனா பரிசோதனை நடைபெற்றது. 

    இதில் சுமார் 100க்கு மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அவர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டது. அவர்களிடம் முககவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கி இலவச முககவசமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் கணேசன், துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றிச்செல்வன், இன்ஸ்பெக்டர் தங்க பாண்டியன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம், நகராட்சி பொறியாளர் சங்கர், வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் சுகாதார துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×