search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கொரோனா தடுப்பூசி-தபால் ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுமா?

    கர்ப்பிணிகள், முக்கிய இணை நோயாளிகள் தவிர மற்ற அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என தபால்துறை அறிவுறுத்தியுள்ளது.
    திருப்பூர்:

    தபால் ஊழியர்கள் குறைந்தது முதல் டோஸ் தடுப்பூசியாவது போட்டு இருக்க வேண்டும். இல்லையேல் விடுமுறை அளிக்கும்படி தமிழ்நாடு தபால்துறை தலைவர் உத்தரவிட்டிருந்தார். ஆனால் தபால் ஊழியர் பெரும்பாலானோர் விருப்பம் இருந்தும் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக போடாமல் உள்ளனர்.

    இதுகுறித்து திருப்பூர் தபால் கோட்ட உதவி கண்காணிப்பாளர் வெங்கடேசன் கூறுகையில்:

    தபால் ஊழியர் பெரும்பாலானோர் விருப்பம் இருந்தும் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக போடாமல் உள்ளனர்.முன்களபணியாளர்கள் என்ற முறையில் தபால்துறை ஊழியர்களுக்கு பிரத்யேக தடுப்பூசி முகாம்கள் இதுவரை நடத்தப்படவில்லை. பிற மாவட்டங்களில் நடந்துள்ளது. தடுப்பூசி போடாதவர்களுக்கு விடுமுறை அளித்தால் தபால் சேவை வழங்க முடியாது என்பதால் பல தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.

    இறுதியில் கர்ப்பிணிகள், முக்கிய இணை நோயாளிகள் தவிர மற்ற அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என தபால்துறை அறிவுறுத்தியுள்ளது. பொது தடுப்பூசி முகாமில் முன்னுரிமை அளித்தால் மட்டுமே சாத்தியம். இணை சுகாதார இயக்குனர், மாவட்ட நிர்வாகத்திற்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர் என்றார்.
    Next Story
    ×