search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    ஆற்காடு பஸ் நிலையத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

    ஆற்காடு பஸ் நிலையத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆற்காடு:

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா மேல்சீசமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 30), எலக்ட்ரீசியன். இவருக்கு நேற்று முன்தினம் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவர், ஆரணியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று, நேற்று ஆற்காடு வந்தார்.

    பஸ் நிலையம் அருகில் விஷ மருந்தைக் குடித்துள்ளார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வினோத்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×