search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருப்பு பூஞ்சை
    X
    கருப்பு பூஞ்சை

    நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் இதுவரை கருப்பு பூஞ்சை நோய் அறிகுறியுடன் வந்த 16 பேருக்கு சிகிச்சை

    நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் இதுவரை கருப்பு பூஞ்சை நோய் அறிகுறியுடன் வந்த 16 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இருப்பதாகவும், அதில் 4 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளதாகவும் மருத்துவக்கல்லூரி டீன் சாந்தா அருள்மொழி கூறினார்.
    நாமக்கல்:

    தமிழகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்து வரும் நிலையில், தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பும் நபர்களில் சிலர் கருப்பு பூஞ்சை நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருந்து குறிப்பிட்ட சில ஆஸ்பத்திரிகளில் மட்டுமே கிடைப்பதால் பெரும்பாலான ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற முடியாத நிலை இருந்து வருகிறது.

    நாமக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மட்டுமே இதற்கென சிறப்பு வார்டு தொடங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை மாவட்டத்தில் 16 பேர் கருப்பு பூஞ்சை நோய் அறிகுறியுடன் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்து உள்ளனர். 6 பேருக்கு அங்கேயே கருப்பு பூஞ்சை நோய் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து அரசு மருத்துவக்கல்லூரி டீன் சாந்தா அருள்மொழி கூறியதாவது:-

    நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இதுவரை 16 பேர் கருப்பு பூஞ்சை நோய் அறிகுறியுடன் சிகிச்சைக்கு வந்துள்ளனர். இவர்களில் ஆரம்ப நிலையில் வந்த 4 பேர் குணமாகி வீடு திரும்பி விட்டனர். ஒருவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள 11 பேர் சேலம், கோவை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டனர்.

    பொதுவாக இந்த நோய் கொரோனாவில் இருந்து மீண்ட சர்க்கரை நோயாளிகளை மட்டுமே அதிகம் தாக்குகிறது. எனவே சர்க்கரை நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்து கொள்ள வேண்டும். லேசான தலைவலி, கண்வலி வந்தால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும். ஆரம்ப நிலையில் வந்தால் எளிதில் குணப்படுத்தி விடலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×