search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    தர்மபுரியில் நாளை மறுநாள் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்

    முகாமுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும். இந்த அரிய வாய்ப்பினை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தர்மபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு முகாம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு தர்மபுரி இலக்கியம்பட்டி ராஜாஜி நீச்சல் குளம் அருகே உள்ள அரசு செவித்திறன் குறைபாடுடையோருக்கான மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது.

    எனவே தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் ஆதார் அட்டை, தேசிய அடையாள அட்டை ஆகியவற்றுடன் முகாமில் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இந்த முகாமுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும். இந்த அரிய வாய்ப்பினை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×