என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊரடங்கு விதிமுறைகள்-அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு
Byமாலை மலர்22 Jun 2021 10:18 AM GMT (Updated: 22 Jun 2021 10:19 AM GMT)
திருப்பூர் மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் தற்போது கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 458 பேருக்கு தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 79 ஆயிரத்து 182ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 1,575 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரத்து 142ஆக உயர்ந்துள்ளது.
தற்போது மாவட்டம் முழுவதும் கொரோனா பாதித்த 3 ஆயிரத்து 341 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 3 பேர் பலியானதன் மூலம் மாவட்டத்தில் மொத்த பலி எண்ணிக்கை 699 ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. பல இடங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
அதனை தடுக்க தட்டுபாடின்றி பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக தற்போது வாக்காளர் பட்டியல் அடிப்படையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
மேலும் பனியன் நிறுவனங்கள், மளிகை, காய்கறி கடைகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சமூக இடைவெளியை பின்பற்றாமல் வியாபாரத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
Next Story
×