search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    குமரியில் 2 மாதத்திற்கு பிறகு கொரோனா தினசரி பாதிப்பு 83 ஆக குறைந்தது

    நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 35 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் இதுவரை 56,058 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் 100-க்கு கீழ் இருந்தது. ஏப்ரல் 15-ந்தேதிக்கு பிறகு பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளானார்கள்.

    மே மாத தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டது. தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக ஒரே நாளில் 1,500 பேருக்கு தொற்று ஏற்பட்டிருந்தது. இதனால் மே மாதத்தில் மட்டும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றனர்.

    ஜூன் மாதத்தில் பாதிப்பு சற்று குறையத் தொடங்கியது. தினசரி பாதிப்பு 500-க்கு கீழ் சென்றது. கடந்த வாரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் 2 மாதத்திற்கு பிறகு தினசரி பாதிப்பு 100-க்கு கீழ் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 83 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

    அகஸ்தீஸ்வரம் யூனியனில் 4 பேருக்கும், கிள்ளியூர், குருந்தன்கோட்டில் தலா 7 பேரும், மேல்புறத்தில் 12 பேரும், முஞ்சிறையில் 6 பேரும், ராஜாக்கமங்கலத்தில் 5 பேரும், தோவாளையில் ஒருவரும், தக்கலையில் 6 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 35 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் இதுவரை 56,058 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

    தற்போது 6 ஆயிரம் பேர் மட்டுமே சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். இதில் பெரும்பாலானோர் வீட்டு தனிமையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் உள்ள படுக்கைகள் காலியாக உள்ளது.
    Next Story
    ×