search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஆடுகளுக்கு தடுப்பூசி-கால்நடைத்துறை அறிவுறுத்தல்

    செம்மறியாடுகளுக்கு மழைக்காலங்களில் நீலநாக்கு நோய் தாக்கும் வாய்ப்புள்ளது.
    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு பரவலாக மேற்கொள்ளப்படுகிறது. இறைச்சி, பால், தோல், ரோமம் மற்றும் உரத்தேவைக்காக ஆயிரக்கணக்கான ஆடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.பல்வேறு காரணங்களால் வெள்ளாடுகளை அடைப்பான், துள்ளுமாரி, கோமாரி, தொண்டை அடைப்பான், ஆட்டம்மை போன்ற பல்வேறு நச்சு உயிரி நோய்கள் தாக்க வாய்ப்புள்ளது.

    குறிப்பாக மழைக்காலத்தில் ஆட்டின் ஆறு மாத வயதில் அடைப்பான் நோய் தாக்க வாய்ப்புள்ளது. நோய் அறிகுறிகள் தென்பட்டால் அருகிலுள்ள கால்நடை மருத்துவரை அணுகி தடுப்பூசி போட வேண்டும்.இதேபோல் செம்மறியாடுகளுக்கு மழைக்காலங்களில்  நீலநாக்கு நோய் தாக்கும் வாய்ப்புள்ளது. எனவே ஆண்டுக்கு ஒருமுறை இந்நோய்க்கான தடுப்பூசி போட வேண்டும் என கால்நடைத்துறை அறிவுறுத்தியுள்ளது.
    Next Story
    ×