search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக சட்டசபை
    X
    தமிழக சட்டசபை

    எழுத்தாளர் கி.ராஜநாராயணன், நடிகர் விவேக் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல்

    மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கலசப்பாக்கம் பாண்டுரங்கன், ராணிப்பேட்டை முகமதுஜான், குளித்தலை பாப்பா சுந்தரம் உள்ளிட்ட 13 பேருக்கு சட்டசபையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

    சென்னை:

    சட்டசபை இன்று காலை கூடியதும் சபாநாயகர் அப்பாவு, மறைந்த உறுப்பினர்கள் மறைவுக்கும், நடிகர் விவேக் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் மறைவுக்கும் இரங்கல் தீர்மானங்களை வாசித்தார்.

    சபாநாயகர் அப்பாவு

    திரைப்பட நடிகர் விவேக், பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணன், சுதந்திர போராட்ட வீரர் துளசி அய்யா வாண்டையார், இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் டி.எம். காளியண்ணன், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    இதே போல் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கலசப்பாக்கம் பாண்டுரங்கன், ராணிப்பேட்டை முகமதுஜான், குளித்தலை பாப்பா சுந்தரம், கோவை மேற்கு செ.அரங்கநாயகம், திருவொற்றியூர் விஜயன், செய்யூர் ராஜு, பர்கூர் ராஜேந்திரன், செஞ்சி சகாதேவன், மேட்டுப்பாளையம் சுலோச்சனா, பேரூர் கே.பி. ராஜு, மன்னார்குடி ராமச்சந்திரன், பழனி அன்பழகன், திருநாவலூர் ஜெ.பன்னீர்செல்வம் ஆகியோர் மறைவுக்கும் இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டது.

    உறுப்பினர்கள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக கூறி சட்டசபையில் உறுப்பினர்கள் அனைவரும் 2 மணித்துளிகள் எழுந்து நின்று அமைதி காத்தனர்.

    Next Story
    ×