search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்களை படத்தில் காணலாம்.
    X
    திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்களை படத்தில் காணலாம்.

    சமூக இடைவெளியின்றி குவிந்த பொதுமக்கள்-திருப்பூரில் மார்க்கெட் பாதியில் மூடல்

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கட்டுக்குள் வர ஆரம்பித்துள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.

    இந்தநிலையில் ஊரடங்கு தளர்வில் மளிகை-காய்கறி கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில்  உள்ள   மார்க்கெட்டுகள், மளிகை கடைகளில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.

    குறிப்பாக ஞாயிற்றுக்கிழமையான இன்று திருப்பூர் தென்னம்பாளையம் காய்கறி மற்றும் மீன்மார்க்கெட், பழைய பஸ் நிலைய மார்க்கெட்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி குவிந்தனர். இதையடுத்து தென்னம்பாளையம் மார்க்கெட் பாதியில் மூடப்பட்டது.

    இதேப்போல் மாவட்டத்திற்குட்பட்ட தாராபுரம், பல்லடம்,உடுமலை, காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காய்கறி மார்க்கெட்டுகளிலும் பொதுமக்கள் குவிந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். இதன் மூலம் தொற்று மீண்டும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கட்டுக்குள் வர ஆரம்பித்துள்ளது. இச்சூழ்நிலையில் பொதுமக்கள் மார்க்கெட்டுகளில் சமூக இடைவெளியின்றி குவிவது தொற்று மீண்டும் பரவுவதற்கு வழிவகுத்து விடும். 

    எனவே தொற்று குறையும் வரை வீடுகளின் அருகே உள்ள காய்கறி, மளிகை கடைகளில் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
    Next Story
    ×