search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கோவையில் கொரோனா பரவல் 8 சதவீதமாக குறைந்தது

    கோவையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வரை தொற்று பரவல் என்பது 30 சதவீதமாக இருந்தது. அது தற்போது 8 சதவீதமாக குறைந்து உள்ளது.

    கோவை:

    கொரோனா தொற்றின் 2-வது அலை கோவை மாவட்டத்தை ஒரு உலுக்கு உலுக்கி விட்டது. மார்ச் மாத இறுதியில் இருந்து வெகுவாக உயர தொடங்கிய தொற்று பாதிப்பு கடந்த மே மாதத்தில் புதிய உச்சமாக 4,700-யை கடந்து சென்றது.

    அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் எடுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கையை அடுத்து தற்போது தொற்று பரவல் சற்று குறைந்து வருகிறது. இருப்பினும் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் கோவையில் இன்னும் கொரோனா கட்டுக்குள் வரவில்லை.

    மற்ற மாவட்டங்களில் 500-க்கு கீழ் சென்று விட்ட கொரோனா பாதிப்பு கோவையில் மட்டும் 1000-த்தை விட்டு கீழே இறங்க மறுக்கிறது. தொடர்ந்து 1,100, 1,089 என பதிவாகி வருகிறது. நேற்று புதிதாக 1,014 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை மாவட்டம் முழுவதும் 2 லட்சத்து 11 ஆயிரத்து 588 பேர் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1 லட்சதது 98 ஆயிரத்து 526 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர். தற்போது ஆஸ்பத்திரிகளில் 11 ஆயிரத்து 191 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கோவையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வரை தொற்று பரவல் என்பது 30 சதவீதமாக இருந்தது. அது தற்போது 8 சதவீதமாக குறைந்து உள்ளது.

    இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில், கோவையில் கடந்த ஒருவாரமாக தொற்று பரவல் என்பது வெகுவாக குறைந்துள்ளது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு 100 பேருக்கு பரிசோதனை செய்தால் 50 பேருக்கு தொற்று பாதிப்பு இருந்தது. ஆனால் தற்போது 100 பேரை பரிசோதித்தால் 6 முதல் 8 பேருக்கு மட்டுமே தொற்று உள்ளது. இது 8 சதவீதமாகும். தொற்று குறைந்தாலும் மக்கள் அலட்சியமாக இருக்க கூடாது. கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×