search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யூ டியூப் கேம் மதன்
    X
    யூ டியூப் கேம் மதன்

    பப்ஜி மதனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்- சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு

    சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து 'ப‌ப்ஜி' மதன், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
    சென்னை:

    யூ டியூப் சேனலை நடத்தி வரும் மதன் என்பவர் தனது யூ டியூப் சேனல்களில் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டின் மூலம் சிறுவர்களை தவறான பாதைக்கு திசை திருப்புவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதே நேரத்தில் தன்னுடன் தொலைபேசியில் உரையாடும் இளம்பெண்களிடம் ஆபாசமான வார்த்தைகளை மதன் பேசுவதும் தெரிய வந்தது. இதுதொடர்பாக புகார்கள் எழுந்தன.

    இதையடுத்து சென்னை புளியந்தோப்பு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதனை தேடி வந்தனர்.

    இதற்கிடையே தனிப்படை போலீசார் தேடுவதை அறிந்து கொண்ட மதன், கடந்த 15-ந் தேதி முதல் தலைமறைவானார்.


    மதனை கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். தர்மபுரியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து,  மதனை கைது செய்த போலீசார் சென்னைக்கு அழைந்து வந்தனர்.

    இன்று சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து 'ப‌ப்ஜி' மதன், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி பப்ஜி மதனை ஜூலை 3ந்தேதி வரை சிறையிலடைக்க உத்தரவிட்டார்.

    பப்ஜி மதனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 700 வீடியோக்களிலும் ஆபாசமாக பேசியது மதன் தான் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

    பப்ஜி மதனிடம் ஏமாந்தவர்கள் புகார் அளிக்க புதிய மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்டுள்ளது.
    Next Story
    ×