search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கோவையில் அதிகரிக்கும் வாகன திருட்டு சிறுவன் உள்பட 2 பேர் கைது

    கோவையில் அதிகரிக்கும் வாகன திருட்டு சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை சவுரிபாளையம் அருகே உள்ள என்.ஜி.ஆர். வீதியை சேர்ந்தவர் சேகர் (வயது 40). இவர் தனது மோட்டார் சைக்கிளை திருச்சி ரோடு லங்கா கார்னர் பகுதியில் நிறுத்தி விட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருட்டுப் போயிருந்தது. இதுகுறித்து சேகர் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    அதேபோல ரத்தினபுரியைச் சேர்ந்தவர் (சுரேஷ் 49 )இவர் தனது காரை ரத்தினபுரி சம்பத் வீதியில் நிறுத்திவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது கார் திருட்டு போய்விட்டது. இதுகுறித்து சுரேஷ் ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காரை திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள்.குனிய முத்தூரைச் சேர்ந்தவர் நாகராஜ் (23). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் திருட்டு போய்விட்டது. இதுகுறித்து நாகராஜ் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிங்காநல்லூர் அருகே உள்ள வரதராஜ புரத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (29). இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார்சைக்கிள் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து மோகன்ராஜ் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது கோவை மாநகர பகுதிகளில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் மற்றும் கார் திருட்டு சம்பவம் அதிகரித்துள்ளதால் போலீசார் தனிப்படை அமைத்து மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களை திருடி செல்லும் மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். இதற்கிடையே மேட்டுப்பாளையம் பகுதியில் தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். முகமது அபு (19),மற்றும் ஒரு சிறுவன் பிடிபட்டனர்.

    Next Story
    ×