search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை
    X
    மேட்டூர் அணை

    மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு

    மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததாலும், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 93.53 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 92.84 அடியாக சரிந்தது. இன்று இது 92.12 அடியாக குறைந்துள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 443 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீர் அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.

    இதனிடையே கர்நாடகாவில் கபினி அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கும் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×