search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    கல்வி தொலைக்காட்சியில் புதிய கல்வியாண்டு பாடத்திட்டம்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

    பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
    சென்னை:

    கொரோனா தொற்று காரணமாக கடந்த கல்வி ஆண்டு முழுவதும் (2020-21)  ஆன்லைன் வாயிலாகவும், கல்வி தொலைக்காட்சி, வாட்ஸ்அப் மூலமாகவும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டன.

    கொரோனா தொற்று குறையாததால் 1-ம் வகுப்பு முதல்  12-ம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் அனைவரும் கடந்த கல்வி ஆண்டில் தேர்வு எழுத நிலையில் அனைத்து மாணவர்களும் பாஸ் ஆனதாக தமிழக அரசு அறிவித்தது.

    இதில் பொதுத்தேர்வை எழுத இருந்த மாணவர்களுக்கு மட்டும் மதிப்பெண் எவ்வாறு வழங்குவது என் பது குறித்து கல்வித்துறை தீவிரமாக   ஆலோசித்து வருகின்றன.

    ஆன்லைன் கல்வி

    இதற்கிடையே இந்த கல்வி ஆண்டுக்கான (2021-22) வகுப்புகள்  ஆன்லைன் மூலமே தொடங்கப்பட அதிக வாய்ப்புள்ளது.  சில தனியார் பள்ளிகளில் ஏற்கனவே ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டு ஆசிரியர்களால் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    அரசு பள்ளி மாணவர்களை பொறுத்தவரை கடந்த கல்வி ஆண்டில் கல்வி தொலைக்காட்சி மூலமும் அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் வாட்ஸ்அப் மூலமும் பாடங்கள் நடத்தி வருகின்றனர்.

    இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தமிழ்நாடு முழுவதும் வேகமாக நடந்து வருகிறது. இந்த நிலையில்  கல்வி தொலைக்காட்சி மூலமாக இன்று முதல் வகுப்புகள்  தொடங்கி உள்ளன.


    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்வி தொலைக்காட்சி சேவையை நேரில் சென்று தொடங்கி வைத்தார்.

    கொரோனா காரணமாக பள்ளி செல்ல இயலாமல் இருக்கும் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே கல்வி பயில ஏதுவாக 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளுக்குரிய அனைத்து பாடங்களுக்குமான கல்வி தொலைக்காட்சி சேவையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்து அதில் ஒளிபரப்பப்பட்ட பாடங்களை சிறிது நேரம் அமர்ந்து கவனித்தார்.

    ரூ.292 கோடி செலவில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 69 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவார்கள்.

    நிகழ்ச்சியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×