search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபாநாயகர் அப்பாவு
    X
    சபாநாயகர் அப்பாவு

    சட்டசபையில் அனைத்து கட்சிகளுக்கும் அரசியல் பேதமின்றி வாய்ப்பு வழங்கப்படும் - சபாநாயகர் அப்பாவு

    சட்டசபைக் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் கூட்ட வேண்டும் என்பது குறித்து 21-ம் தேதி ஆய்வுக்குழு கூடி முடிவெடுத்து அறிவிக்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையான ராஜ்பவனுக்கு தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு நேற்று சென்றார். தமிழக சட்டசபையில் 21-ம் தேதி கூடும் கூட்டத்தொடரின் முதல் கூட்டத்தில் உரையாற்ற வரும்படி கவர்னர் பன்வாரிலால் புரோகித்திற்கு சபாநாயகர் மு.அப்பாவு அழைப்பு விடுத்தார். அதன்பின், நிருபர்களுக்கு சபாநாயகர் அப்பாவு அளித்த பேட்டி வருமாறு:

    16-ம் சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் வரும் 21-ம் தேதி தொடங்குகிறது. முதல் நாள் கூட்டத்தில் கவர்னர் உரை நிகழ்த்துவார். எனவே சட்டசபை கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு கவர்னரை சபாநாயகர் சந்தித்து அழைப்பது வழக்கமாக உள்ளது. அதன்படி கவர்னரை சந்தித்து அழைப்பு விடுத்தேன். அவரும் மகிழ்வுடன் வருவதாக ஒப்புதல் அளித்தார்.

    கவர்னர் பன்வாரிலால் புரோகித்

    சட்டசபை கூட்டத்தொடரை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு. அது பரிசீலனையில் உள்ளது. கட்டாயம் அது நிறைவேற்றப்படும்.

    முதலமைச்சர் ஏற்கனவே சொன்னதுபோல, ஜனநாயக முறைப்படி விருப்பு வெறுப்பின்றி அனைத்து கட்சிகளுக்கும் சட்டசபையில் பேசும் வாய்ப்புக்கான நேரம் ஒதுக்கப்படும். மக்களுக்கு வழங்கப்படும் 14 வகை மளிகைப் பொருட்களை அனைத்துக்கட்சி சட்டசபை உறுப்பினர்களும் கொண்டுபோய் கொடுக்கச் சொல்லி முதலமைச்சர் கூறியுள்ளார். அதுபோன்ற ஜனநாயகம் சட்டசபையிலும் நடக்கும்.

    இந்த கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் கூட்ட வேண்டும் என்பது குறித்து 21-ம் தேதி சட்டசபையில் கவர்னர் உரை நிகழ்ச்சி முடிந்த பிறகு ஆய்வுக்குழு கூடி முடிவெடுத்து அறிவிக்கும் என தெரிவித்தார்.
    Next Story
    ×