search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கொரோனா ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறந்ததை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

    கொரோனா ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் திறந்ததை கண்டித்து தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பா.ம.க.வினர் அவரவர் வீடுகள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    தர்மபுரி:

    கொரோனா ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டதை கண்டித்தும், கொரோனா நோய் தொற்றால் இறந்தவர்களை முறையாக கணக்கெடுப்பு நடத்தி அவர்கள் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கக்கோரியும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பா.ம.க.வினர் கருப்புக்கொடி ஏந்தியும், கருப்பு சட்டை அணிந்தும் அவரவர் வீடுகள் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்றும் அவர்கள்வலியுறுத்தினர்.

    டாஸ்மாக் கடைகளை திறந்ததை கண்டித்து பென்னாகரத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. தலைமையில் கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பா.ம.க. மாவட்ட தலைவர் செல்வகுமார், மாநில இளைஞர் சங்க துணை தலைவர் சத்தியமூர்த்தி, முன்னாள் ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், பென்னாகரம் தொகுதி அமைப்பு செயலாளர் சுதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு மதுக்கடைகளை திறந்த தமிழக அரசை கண்டித்து கோஷங்கள்எழுப்பினர்.

    இதேபோன்று தர்மபுரியில் உள்ள பா.ம.க. அலுவலகம் முன்பு மாநில துணை பொதுச்செயலாளர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தில் பசுமை தாயக மாநில துணைச் செயலாளர் மாது, முன்னாள் மாவட்ட செயலாளர் சண்முகம், மாநில அமைப்பு துணைத் தலைவர் வாசு நாயுடு, சிறப்பு மாவட்ட செயலாளர் சின்னசாமி, நகர செயலாளர்கள் சத்தியமூர்த்தி, வெங்கடேசன், இளைஞர் சங்க மாவட்டச் செயலாளர் தகடூர் தமிழன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மதுக்கடைகளை திறந்த தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

    டாஸ்மாக் கடைகள் திறந்ததை கண்டித்து நல்லம்பள்ளி ஒன்றியம் இண்டூரில் மாநிலத் துணைத் தலைவர் சாந்தமூர்த்தி தலைமையில் பா.ம.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட செயலாளர் பெரியசாமி, ஒன்றிய செயலாளர் சக்தி, கட்சி நிர்வாகி சிவாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.பி. பாரிமோகன் தலைமை தாங்கினார். இதில் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், பாட்டாளி தொழிற்சங்க மாநில துணை பொதுச்செயலாளர் தகடூர் ரவி, முன்னாள் நகர செயலாளர் சம்பத், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் கணேசன், கட்டிட தொழிலாளர் சங்க நகர செயலாளர் சின்னசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு டாஸ்மாக் கடை திறந்ததற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதேபோல் காரிமங்கலம் ஒன்றியம் புலிக்கல் கிராமத்தில் வன்னியர் சங்க மாவட்ட தலைவர் பாலாஜி தலைமையில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர்.

    நல்லம்பள்ளியில் மதுக்கடைகளை மூடக்கோரி பா.ம.க சார்பில் கருப்பு கொடி ஏந்தி நேற்று ஆர்ப் பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு பா.ம.க. மாவட்ட செயலாளர் பெரியசாமி தலைமை தாங்கி, ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் மற்றும் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் முருகன், ஒன்றிய தலைவர் ரங்கநாதன், ஒன்றிய துணை செயலாளர் குப்பன், பாகலஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு, மதுக்கடைகளை மூடக்கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினர். அப்போது, கருப்பு கொடி மற்றும் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஏரியூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களான புதுசோளப்பாடி, பட்டக்காரன் புதூர், அச்சம்பட்டி, நெருப்பூர், நாகமரை, செல்லமுடி, பூச்சூர் உள்ளிட்ட 30- க்கும் மேற்பட்ட ஊர்களில் பா.ம.க.வினர் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சமூக இடைவெளியுடன் நின்று அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    Next Story
    ×