search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    பெண் தர மறுத்ததால் நண்பர்களுடன் சேர்ந்து கொத்தனாரை கொன்ற வாலிபர்

    கொத்தனார் கொலை செயப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே சின்னகோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்தவர்கள் ராஜா. அவரது மகன் செல்வகுமார் (வயது 31). கொத்தனாராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று மாலை தனது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து செல்வகுமார் அந்த பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் மது குடித்தனர். அப்போது அவர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மற்ற 4 பேரும் சேர்ந்து செல்வகுமாரை பாட்டிலால் தாக்கினர். பின்னர் அருகில் கிடந்த கல்லை எடுத்து செல்வகுமாரின் தலையில் போட்டனர். அப்போது அவர் ரத்த வெள்ளத்தில் அலறிதுடித்தார்.

    அதிர்ச்சி அடைந்த 4 பேரும் செல்வகுமார் இறந்து விட்டார் என கருதி அங்கிருந்து ஓடிவிட்டனர். செல்வகுமாரின் அலறல் சத்தம் அந்த வழியாக வந்தவர்கள் முந்திரி தோப்புக்கு விரைந்தனர். அப்போது செல்வகுமாரின் உடலில் அசைவு காணப்பட்டது. உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் விரைந்தனர். உயிருக்கு போராடிய செல்வகுமாரை தூக்கி கொண்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வகுமார் இறந்து போனார்.

    இதுகுறித்து கொலையாளிகள் பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில பரபரப்புதகவல்கள் கிடைத்து உள்ளது.

    சின்னகோட்டகுப்பம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவர் கொலையுண்ட செல்வகுமாரின் நண்பர் ஆவார். கடந்த சிலநாட்களுக்கு குப்புசாமி தனது நண்பர் செல்வகுமாரிடம் உன் மனைவியின் தங்கையை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன். அதற்கு நீதான் பேசி முடிக்க வேண்டும் என்றார். ஆனால் செல்வகுமார் மறுத்து விட்டதோடு வேறு ஒருவருடன் தனது கொளுந்தியாளுக்கு நிச்சயம் செய்தார்.

    இதனை அறிந்த குப்புசாமி ஆத்திரம் அடைந்தார். அவர் செல்வகுமாரை பழிவாங்கதிட்டமிட்டார். அதன்படி நேற்று நைசாக பேசி மதுகுடிக்க அழைத்து சென்றார். அங்கு தனது நண்பர்களுடன் செல்வகுமாரை கொலை செய்து உள்ளார்.

    மேற்கண்டவை போலீஸ் விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

    போலீசார் வழக்குபதிவு செய்து குப்புசாமி உள்பட 4 பேரை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×